அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் தர வேண்டியவர்களுக்கு பதில் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னை ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்ஜியார் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தி.மு.க.வின் முப்பெருந்தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி என்ற நிலை மாறி, தற்போது ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதியே முன்னிலைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி மதுப்பழக்கத்தை அதிகரிக்க முழு மூச்சுடன் பாடுபடுவதாக தெரிவித்துள்ள ஜெயகுமார், 5 ரூபாய் முத்துசாமி என்று பெயர் வாங்கும் அளவுக்கு தற்போது டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கூறியுள்ளார்.