பருவ நிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக டெங்கு போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், 6 மாதங்களுக்குத் தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை நேரடியாக வழங்கும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பது அவரின் குற்றச்சாட்டு.
அனைத்துப் பெரிய மருத்துவமனைகளிலும், லோக்கல் கொள்முதல் என்ற பெயரில், மருந்துகள் அதிக விலைக்கு உள்ளூரிலேயே வாங்கப்படுவதால், மக்களின் வரிப்பணம் வீணாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தேவையான மருந்துகள் இருப்பதை சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்துமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.