சிறைவாசியாக செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் வரும் தேர்தலில் முதலமைச்சருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடியை அடுத்துள்ள இருப்பாளியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு 58 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.