கக்கன்'' திரைப்படம் தனது தாத்தாவுக்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியும் சேலம் சரக டிஐஜியுமான ராஜேஷ்வரி தெரிவித்துள்ளார்.
நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர் பெற்ற முன்னாள் அமைச்சர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ''கக்கன்'' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெயிலரை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கக்கனின் பேத்தியும் டிஐஜியுமான ராஜேஷ்வரி, தற்போதைய இளம் தலைமுறையினருக்கும் கக்கன் பற்றி தெரிய வேண்டும் என்றார்.