கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எருமை மாட்டிற்கு இருவர் உரிமை கோரிய நிலையில், மாடு யாரிடம் அதிக பாசத்தைக் காட்டியதோ அவருடனேயே போலீசார் அனுப்பி வைத்தனர்.
வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்- தீபா தம்பதியர், சில மாதங்களுக்கு முன் காணாமல் போன தங்களது மாடு பழஞ்சநல்லூரில் பழனிவேல் என்பவர் வீட்டில் இருப்பதாக புகார் அளித்த நிலையில், காவல்நிலையத்தில் கட்டி வைக்கப்பட்ட மாட்டை அவிழ்த்துவிட்டபோது அது பழனிவேல் பின்னாலேயே சென்றது.