விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
கட்டாலங்குளத்தைச் சேர்ந்த பழனி-முத்துவள்ளி ஆகியோருக்கு கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குழந்தையில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 30ந்தேதி முத்துவள்ளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது சாவில் மர்ம ம் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக முத்துவள்ளியை அடித்து கொன்று விட்டு, அவரே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல பழனி நாடகம் ஆடியிருப்பது தெரிய வந்தது.