தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், தக்காளி வாங்கும் விலைக்கு விலைக்கு ஆப்பிளே வாங்கிவிடலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய அவர், விலையேற்றத்தால் கிலோ கணக்கில் வாங்குவதற்கு பதில் எண்ணிக்கை அடிப்படையிலேயே தக்காளியை மக்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், கட்டுமானப் பொருட்களின் விலையும் திமுக ஆட்சியில் 100 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், இனி தமிழக மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, தற்போது தகுதியானோருக்கு மட்டும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தது ஏன் என்றும் வினவினார்.