நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன.
பீகாரில் இருந்து சங்கமித்ரா ரயிலில் பெரம்பூர் வந்திறங்கிய இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் சோதனை செய்த போது, கஞ்சா எண்ணெய், மற்றும் போதைப் பொருள் தயாரிக்கும் 25 கிராம் மூலப் பொருள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி போதை தரக்கூடிய ஐஸ் கிரீம், சாக்லேட், பாக்கெட் குளிர்பானம் ஆகியவற்றை தயாரித்து பிரபலங்களுக்கும், மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. சர்வதேச போதை பொருள் கும்பலுக்கு தொடர்பா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.