கன்னியாகுமரியில் தனியார் மதுபான பார்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்வோர் மீது குண்டாஸ் பாயும் என, புதிதாக பொறுப்பேற்றுள்ள சரக டிஎஸ்பி மகேஷ் குமார் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை மீறி நடைபெற்றுவரும் மது விற்பனையை தடுக்கும் வகையில், தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு அழைத்து டிஎஸ்பி மகேஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்கக் கூடாது எனவும், மீறினால் குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். காவலர்களுக்கு ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.