அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், குற்றப்பின்னணி மற்றும் வழக்கு உள்ளவர்களை அமைச்சராக்கினால் இந்த நடவடிக்கையை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் எனக்கூறி உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை திசைதிருப்ப அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், குற்றப்பின்னணி மற்றும் வழக்கு உள்ளவர்களை அமைச்சராக்கினால் அந்த நடவடிக்கையை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்றார்.
பாரதிய ஜனதாவை வாஷிங் மெஷின் என்றும் கங்கை நதி என்றும் திமுகவினர் விமர்சித்துள்ளதை வரவேற்றுள்ள வானதி சீனிவாசன், தங்கள கட்சியில் சேர்ந்தால் நேர்மையின் அடிப்படையில், சட்டத்தின் அடிப்படையில் நல்லவர்களாக மாறி விடுகின்றனர் என்றார்
தேர்தலில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், தான் 1000 பெண்களை தொழில் முனைவோராக மாற்றி இருப்பதாக தெரிவித்தார்