"பொன்முடி வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை குறித்து "என்னதான் நடக்கும், நடக்கட்டுமே.." என பாட்டுப்பாடும் அமைச்சர் துரைமுருகன், அடுத்த வாரம் தனது வீட்டிற்கு அமலாக்கத்துறை வந்தால் "சட்டி சுட்டதடா. கை விட்டதடா.. என்று பாட்டுப்பாடுவாரா..?" என தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.