அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் பேசிய அவர், அதிமுகவை கைக்குள் வைத்தது போல திமுகவை வைக்க நினைப்பதாகவும் அது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று கூறிய அவர், அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி அச்சுறுத்தி பார்க்கின்றனர் என்றார்.
அதிமுகவை கைக்குள் வைத்திருப்பது போல திமுகவையும் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் பாஜக அரசின் எண்ணம் ஒரு போதும் நடக்காது என்றும் அவர் கூறினார்.