காவேரி மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததை அடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னும் பின்னும் காவல் துறை வாகனங்களின் பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி கூட்டிச் செல்லப்பட்டார்.
சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின் விசாரணைக் கைதிகளுக்கான முதல் வகுப்பு சிறை அறை செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறையில் உள்ள மருத்துவர்கள் காலை மற்றும் மாலையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே நெஞ்சு வலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதாகக் கூறி செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ல் பைபாஸ் செய்யப்பட்டது. கைதாகி 33 நாட்கள் கடந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்குப் பின் செந்தில் பாலாஜி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வரும் 26-ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.