எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 18ஆம் தேதியன்று, கர்நாடக அரசுக்கு கண்டன குரல் எழுப்பவில்லை என்றால் கருப்புக்கொடி போராட்டத்தை பா.ஜ.க. முன்னெடுக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் பேட்டியளித்த அவர், சந்தர்ப்பவாத கூட்டணிக்காக கர்நாடக காங்கிரஸ் அரசை தமிழ்நாடு அரசு கண்டிக்கவில்லை என விமர்சித்தார்.
முன்னதாக, காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுவதாக கூறினார்.
இந்தியாவில் உள்ள 80 கோடி பேர் காமராஜரை பற்றி படித்திருப்பார்கள் என்றும் தமிழக பாடங்களில் அவரது வரலாறு சில இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.