நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியபோது,விற்பனையாளர் 20 ரூபாய் கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது.
பணம் தர மறுத்து ஆனந்த் வீடியோ எடுத்ததால், டாஸ்மாக் மேற்பார்வையாளர் மாதேஷ் அவரைத் தாக்கி செல்போனைப் பறித்து கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகின்றது
தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், வேலை பறிபோய்விடுமோ என பயந்த மாதேஷ், பேருந்து நிலையம் அருகே ஆனந்தை சந்தித்து செல்போனை வாங்கி சரி செய்து கொடுத்து விட்டு , வெற்று காகிதத்தை நீட்டி , நீ கையெழுத்து போட்டால்தான் என் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் எனக் கூறி கையெழுத்து கேட்டு மிரட்டியதாக மேற்பார்வையாளர் மீது மதுப்பிரியர் புகார் அளித்துள்ளார்