தென்காசி சட்டமன்ற தொகுதியில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கை குறித்த விவர அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கான மறு வாக்கு எண்ணிக்கையில் 373 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிமுக சார்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.