யாருக்கெல்லாம் மாதம் ஆயிரம் ரூபாய் அவசியம் தேவையோ அவர்களுக்கு எல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், ஏழைகளே உண்மையான உயரதிகாரிகள் என்பதால் அவர்களிடம் நற்பெயரைப் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
பாலின இடைவெளியை நீக்கும் முயற்சியாகவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர் மகளிருக்கு பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளதாகவும், எந்த சிக்கலும் இல்லாமல் அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.