கட்சியின் சின்னம் உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவிற்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால் ஒ.பி.எஸ் தரப்பினர் கட்சிக் கொடியை பயன்படுத்தினால் அது போர்ஜரி ஆகும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் தரப்பினர் அதிமுகவின் லட்டர் பேடை பயன்படுத்தினாலோ, அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி பேனர்கள் வைத்தாலே கட்சி சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெயக்குமார் கூறினார்.
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்த பின்னர், இக்கருத்தை ஜெயக்குமார் தெரிவித்தார்.