வாணியம்பாடி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய அடித்தளம் கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள பழைய அங்கன்வாடி மையம் கட்டிடம் சிதிலமடைந்ததால், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்துக்கு முன் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், அந்த கான்கிரீட் கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, கட்டிடத்தை தரமான முறையில் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.