திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உயிரோடு இருக்கும் தனது பெயரில் இறப்பு சான்றிதழ் வாங்கி ரேஷன் அட்டையிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக 17 வயது சிறுவன் ஒருவன் குற்றம்சாட்டியுள்ளார்.
களம்பூர் இந்திராநகரைச் சேர்ந்த கோபி என்ற அந்த சிறுவன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், தனது பாட்டி, அண்ணன் உள்ளிட்ட உறவினர்கள், போலி ஆவணம் மூலம் இறப்பு சான்றிதழ் பெற்று தனது பெயரிலுள்ள சொத்தினை அபகரிக்க முயல்வதாக கூறி புகார் அளித்துள்ளார்.