விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் நாளை முதல் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த அவர், வட சென்னையில் 32 கடைகள், மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 கடைகளில் நாளை முதல் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட உள்ளதாக கூறினார்.
சென்னை நியாய விலைக்கடைகளின் நடக்கும் விற்பனையின் அடிப்படையில், அனைத்து மாவட்ட ரேஷன் கடைக்கும் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வரும் காலங்களில் வேளாண் விற்பனை மையம் மூலம் தக்காளியை கொள்முதல் செய்யவும், நெல், கரும்பு போல தக்காளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.