மேகதாது அணை விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க அமைச்சர் துரைமுருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.