செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நடுவுல கொஞ்சம் கால்வாய காணோம்..? பட்டைய கிளப்பிய கலெக்டர்..! பதறிப்போன அதிகாரிகள்

Jul 01, 2023 12:51:54 PM

சாத்தான்குளம் பகுதியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத்திட்ட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அங்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுதாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

கால்வாய் எங்கு வருகின்றது என்பதே தெரியாமல் , பெண் விவசாயியின் தோட்டத்தை கையகப்படுத்த நினைத்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் வறுத்தெடுத்த காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலஎடுப்புப் பணி நடந்துவருகிறது. இத்திட்டத்தின் கீழ் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வரத்து கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக 67 கிலோ மீட்டர் திருநெல்வேலி மாவட்டத்திலும், 8 கிலோ மீட்டர் தூத்துக்குடி மாவட்டத்திலும் கால்வாய் அமைய இருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும்போது 3,500 கனஅடி தண்ணீர் அங்கிருந்து திருப்பப்பட்டு, கருமேனியாறு- நம்பியாற்றினை இணைத்து, கடைசியாக இருக்கின்ற கிராமங்களுக்கு 500 கனஅடி தண்ணீர் வரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 8 கிலோ மீட்டர் கால்வாய்ப் பணிகளுக்கு 6.7 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் எடுக்கப்பட்டு அதில் 50 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடுவக்குறிச்சி கிராமத்தில் நிலஎடுப்புப் பணி 11 பட்டாதாரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் நடைபெறாமல் உள்ளது.

இந்தநிலையில் அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தேரிகாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விவசாயிகளிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். 'ஊருக்குள் காலி நிலம் நிறைய இருக்கு அதை விட்டு கால்வாயை தனது தோட்டம் வழியாகச் செல்வது போல அதிகாரிகள் அமைக்க இருப்பதால் தன் நிலத்தை கொடுக்க மறுப்பதாக' பெண் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து கால்வாய் செல்லும் வரைபடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியிலும், விவசாய நிலங்கள் உள்ள பகுதியிலும் கால்வாய் அமைக்காமல் இருப்பதாக சுட்டிக்கட்டினர்

ஆனால் அதிகாரிகளுக்கு அந்த கால்வாய் எந்தவழியாக செல்கிறது என்று உறுதியாக சொல்லத் தெரியவில்லை, கால்வாய் செல்லும் பாதையை அளந்து குறியீடு வைக்கப்பட்டுள்ளதா ? என்று கேட்டபோது அதிகாரிகளிடம் பதில் இல்லை

அதை செய்திருக்க வேண்டிய சர்வேயர் கூட்டத்துக்குள் மறைந்து கொண்டு நின்றார் . அவரை அழைத்து கண்டித்த கலெக்டர் செந்தில்ராஜ், டேப்பை பிடித்து அளந்து மார்க் செய்ய உத்தரவிட்டதால் மெத்தன அதிகாரிகள் விழிபிதுங்கினர்

இறுதியாக தன்னிடம் கோரிக்கையை வைத்த பெண் விவசாயியிடம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் சிரியுங்கள் என்று கூறிச்சென்றார் கலெக்டர்.

பட்டாதாரர்களிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதுகுறித்து நிலநிர்வாகஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

 


Advertisement
காரைக்குடியில் நடைபெற்ற மாரத்தானில் 4,500 பேர் பங்கேற்பு..
தனியார் இனிப்பகத்தில் பிரம்மாண்ட தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் கேக் ..
வாக்குச்சாவடி அலுவலர்கள் வீட்டின் முன் பெயர்ப்பலகை வைக்க பார்வையாளர் அறிவுறுத்தல்
4 படம் ஓடினாலே முதல்வராக வேண்டும் என்று எண்ணுகிறார்கள்... நடிகர் விஜய் மீது மறைமுக விமர்சனம்
ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மூன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனத்தில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது
தரைக்கடியில் செல்லும் மின்சார கேபிளில் ஏற்பட்ட தீவிபத்தால் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மின்தடை
எஸ்.பி.ஐ வங்கிக் கொள்ளை முயற்சி வழக்கில் கைதான இளைஞர்
அரசு நூலகத்தையே தங்கும் விடுதியாக பயன்படுத்தி வரும் பிற மாநில பணியாளர்கள்
பிரேக் பழுதானதால் ஓட்டுநரின் சமயோசிதத்தால் மரத்தில் மோதி நிறுத்தப்பட்ட சுற்றுலா வேன்

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement