தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சுமார் 4 ஆயிரத்து 110 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமானவரி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள வங்கித் தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை சோதனை நடத்தப்பட்டது. அதில், ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2,700 கோடி ரூபாய் தொகை உள்பட 4 ஆயிரத்து 110 கோடி ரூபாய்க்கு முறையாக கணக்குக் காட்டப்படாதது வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கவும் வருமான வரித்துறை தீர்மானித்துள்ளது.