மேல்மருவத்தூர் அருகே பொதுவழி பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் இரும்பு ராடால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் வயலுக்கு செல்லும் பொதுவழி தொடர்பாக அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் வேணு, பூங்காவனம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொது வழி பிரச்னை தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் குப்பனை இரும்பு ராடால் சரவணன் மற்றும் பூங்காவனம் ஆகியோர் சரமாரியாக தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த குப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.