திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது டிராக்டர் மோதி, மின்கம்பி அறுந்து அருகிலிருந்த குளத்தில் விழுந்ததில், அங்கு குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னூர் கிராமத்தை சேர்ந்த பிரகதீஷ்வரி என்ற அந்த மாணவி, வீட்டருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்துவிட்டு குளிப்பதற்காக இறங்கியுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று, குளத்தோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியுள்ளது. இதில் மின்கம்பியானது அறுந்து குளத்தில் விழுந்தில், மின்சாரம் பாய்ந்து, பிரகதீஷ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவித்து, மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு பிரகதீஷ்வரியின் உடல் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. குடும்பத்தின் முதல் பட்டதாரியாக வரவேண்டிய மகள், கண்முன்னே இறந்துகிடப்பதைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.