பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவரின் பாலினத்தை "திருநம்பி" என குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்த மாறா என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தாம் தமிழ்நாடு சமூக நலத்துறையில் பதிவு செய்து திருநம்பி என்றதற்கான அடையாள அட்டை பெற்றுள்ளதாகவும், தற்போது தம்மை திருநம்பி என குறிப்பிட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாரிசு சான்று வழங்க மறுப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவரின் பாலினத்தை "திருநம்பி" என குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.