நடிகர் விஜய் நன்மை செய்யும் நோக்கில் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயின் உதவி தனக்கு தேவை இல்லை என்றார்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்கே இருக்கிறார்கள் என கேள்வியெழுப்பிய சீமான், தற்போது அவர்கள் திமுகவின் கிளை கழகமாக உள்ளனர் என்றும் விமர்சித்தார்.
வரும் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை பொது வேட்பாளராக நிறுத்தினால் ராகுலை அவர் ஊதி தள்ளி விடுவார் எனவும் சீமான் தெரிவித்தார்.