நீட் தேர்வில், நமது மாநில பாடத்திட்டத்தில் இருந்தே 170 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இந்த புதிய பாடத்திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைபள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேசை, இருக்கைகளை செங்கோட்டையன் வழங்கி பேசினார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய பாடத்திட்டம் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை மிஞ்சுகின்ற அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.