100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் லஞ்சம் வாங்கிய பணித்தள பொறுப்பாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட விடயபுரம் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக கடந்த பதினைந்து வருடங்களாக சேரன்மாதேவி என்பவர் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆய்வில் பணித்தள பொறுப்பாளர் சேரன்மாதேவி வேலைக்கு வராத 30 நபர்களின் அட்டையை வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது.
மேலும் விடயபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பணித்தள பொறுப்பாளர் சேரன்மாதேவி 100 நாள் வேலை அட்டையை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாக அவரிடம் வாக்குவாதம் செய்து காணொளியாக அதனை பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.