கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள போகிபுரம் கிராம மக்கள் சுமார் 45 ஆண்டுகளாக பரிசல் மூலமாக அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூளகிரி - சின்னாறு அணையின் மையப்பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரில் அடிப்படை வசதி இல்லாததால் பள்ளி செல்வதற்காகவும், அத்யாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதற்காகவும் ஆற்றை கடந்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆற்றின் இருபுறமும் கயிறு கட்டி அதில் படகு ஒன்றை கட்டி வைத்து அதன் மூலமாக மக்கள் ஆற்றைக் கடந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மேம்பால பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்த நிலையில், நீர் வரத்தை காரணம் காட்டி பொதுப்பணித்துறையினர் பணியை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
ஆற்றை கடக்காமல் செல்ல வேண்டுமெனில் வனப்பகுதிக்குள் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்துச் செல்ல வேண்டும் என்பதால் பாலப்பணிகளை மீண்டும் துவங்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.