இந்தோனேசியாவின் பாலி தீவில் போட்டோ ஷூட்டின் போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்த டாக்டர் தம்பதியரின் உடல் 2 வாரங்களுக்குப் பின் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.
மருத்துவர்களான பூந்தமல்லி சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த விபூஷ்னியாவிற்கும், சேலத்தைச் சேர்ந்த லோகேஸ்வரனுக்கும் ஜூன் 1 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
தேனிலவிற்காகச் சென்ற தம்பதியர் கடலின் நடுவில் உள்ள பாறை மீது நின்று புகைப்படம் எடுத்த போது வேகமாக அடித்த அலையால் நிலைதடுமாறி தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்தனர்.
அடுத்தடுத்த நாட்களில் இருவரது சடலமும் மீட்கப்பட்ட நிலையில், சடலத்தை இந்தியா கொண்டு வருவதற்காக அவர்களது உறவினர்கள் இந்தோனேசியாவிற்குச் சென்றனர்.
2 வாரத்திற்கு பிறகு விமானம் மூலமாக உடல்கள் சென்னை எடுத்து வரப்பட்டன. விபூஷ்னியா உடலுக்கு சென்னீர்குப்பத்திலும், லோகேஸ்வரன் உடலுக்கு சேலத்திலும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.