செந்தில் பாலாஜிக்கு கூடிய விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் குழு பரிந்துரைத்திருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், மயக்கவியல் சிகிச்சை தருவதற்கு செந்தில் பாலாஜி உடல் தகுதியோடு இருக்கிறாரா உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசியுவில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும், பரிசோதனையின் அடிப்படையில் அறுவை சிகிச்சை திட்டமிடப்படும் என்றும் காவேரி மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு பின் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.