திமுக வழக்கறிஞராக இருந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியது தவறு என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் பேட்டியளித்த அவர், கண்ணதாசன் செந்தில் பாலாஜியை சந்தித்திருப்பது, தனது வழக்கில் தானே நீதிபதியாக இருப்பதற்கு சமம் என விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளதாக கூறிய இன்பதுரை, இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.