செந்தில்பாலாஜி இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் பொறுப்பாக மின்துறை ஒதுக்கப்படுகிறது என தகவல்
மதுவிலக்கு, ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக தகவல்
ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசின் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வகித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றி ஒதுக்கீடு
மருத்துவ சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிப்பார் எனவும் தகவல்