காங்கிரசும் திமுகவும் 2 ஜி 3 ஜி 4 ஜி கட்சிகள் என்று சாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாரிசு அரசியலை தூக்கி எறியுமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
வேலூரில் உரை நிகழ்த்திய அமித் ஷா 2 ஜி என்பது இரண்டு தலைமுறைகள், 3 ஜி என்பது மூன்று தலைமுறைகள், 4 ஜி என்பது நான்கு தலைமுறைகளாகத் தொடரும் வாரிசு அரசியலைத்தான் குறிப்பிடுவதாகவும் 2 ஜி ஊழலைப் பற்றி பேசவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய பதில் அளித்தார். 9 ஆண்டுகால மோடி அரசின் சாதனையை விளக்கவே தாம் பயணம் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமித் ஷா விமானப் போக்குவரத்து, ரயில்வே, சாலைத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதை பட்டியலிட்டார்.
இதற்கு துணிவிருந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைக்கு பதில் தரட்டும் என்றும் அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார்.