9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பா.ஜ.க. ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்ட அவர், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 72 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்த போது தமிழகத்திற்கு ஏன் திமுக எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவரவில்லை ? என வினவிய அமித்ஷா, 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருவதாகவும் தெரிவித்தார்.