தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் போது விளையாட்டு பிரிவு தரவரிசையில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம்.
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் போதிய நிதி ஒதுக்காததால் இந்தாண்டு தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க செயலாளர் ராஜா சுரேஷ் கூறியுள்ளார்.
இதனால் நடப்பாண்டில் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறும் வாய்ப்பை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.