திருவாரூரில் மறைந்த தாயின் நினைவாக 5 கோடி ரூபாய் மதிப்பில் மகன் ஒருவர் தாஜ்மஹால் போன்ற நினைவிடத்தை கட்டியுள்ளார்.
அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான அமுர்தீன் என்பவர் 2020ம் ஆண்டு காலமான தனது தாயார் ஜெய்லானி பீவியின் நினைவாக இதனை கட்டியுள்ளார்.
ஷாஜஹான் கால கட்டிடக்கலை பாணியில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களைக் கொண்டு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தை கட்டி முடிக்க சுமார் இரண்டு வருட காலம் ஆனதாக கூறப்படுகிறது. எல்லா மதத்தினரும் இந்த நினைவிடத்தை பார்க்கலாம் என்று அமுர்தீன் தெரிவித்தார்.