புதுவீடு கட்டித்தருவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதால் குடியிருப்புகளை இடித்து காலி செய்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவில்லையென இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தெரிவித்தனர்.
மூங்கிலூரணியில் உள்ள மறுவாழ்வு முகாமில் 186 தமிழ் குடும்பத்தினர் 1990 ஆம் ஆண்டு முதல் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முகாம்வாசிகளுக்கு 52 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மே 1 ஆம் தேதி கட்டுமானப் பணி துவங்கி விடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாகவே வீடுகளை காலி செய்ய வேண்டுமென அதிகாரிகள் கூறியதால் 52 குடும்பத்தினரும் ஏப்ரல் மாதமே வீடுகளை இடித்து விட்டதாக தெரிகிறது.
இதுவரையில் கட்டுமானத்திற்கான எந்த பணிகளும் துவங்கப்படாத நிலையில் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் முகாம் வாசிகள் புகார் மனு அளித்தனர்.