தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் முத்துக்குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கிருந்து இரண்டு நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு யானை வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனியில் மயக்க ஊசி மூலம் பிடிபட்ட அரிகொம்பன் யானை லாரி மூலம் சாலை மார்க்கமாக அகத்திய மலை யானைகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்ட முத்து குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் கொடூரமான செயல்களை செய்த இந்த யானையை நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களும் மலை அடிவாரத்தில் உள்ள பொதுமக்களும் வனத்துறை சோதனை சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.