காலத்திற்கு ஏற்ற கல்வி முறை இல்லாததால் தான் பொறியியல் பட்டதாரிகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
உதகையில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைப்பதாக குறிப்பிட்டார்.
தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகள் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலையை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்களை தாய் மொழியில் கற்க இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.