மதுரையில் ஆடல்பாடல் நிகழ்ச்சியின்போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலின் திருவிழாவையொட்டி நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சியை பார்க்கவிடாமல் மறைத்தபடி ஒரு தரப்பினர் ஆடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கூறியதையடுத்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தகராறாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த தகராறில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.