மதுரையில் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் நடித்து கடைக்கு வரும் சிறுமிகளை தூக்கி சென்று நகைகளை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான்.
மதுரை அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது பேரன், பேத்திகளை அழைத்துக் கொண்டு கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் துணிமணி எடுக்க சென்றுள்ளார்.
அப்போது பேத்தி அணிந்திருந்த செயின் காணாமல் போனது கண்டு திடுக்கிட்ட அவர் கடை மேலாளர் உதவியுடன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ராஜேந்திரன் என்பவனை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் சிறுமிகளை குறி வைத்து நகைகளை திருடியது தெரியவந்தது.