மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் இங்கிருந்து நடைபயணம் கூட மேற்கொள்வோம் என்றும், கண்டிப்பாக அணை கட்ட விட மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
தன்னைப் பற்றிய நடிகர் எஸ்.வி.சேகரின் கருத்துக்குப் பதிலளித்த அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மட்டுமல்ல, கட்சியில் பழங்கதைகள் பேசிக்கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் தன்னை தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என எண்ணினால், தாராளமாக டெல்லி செல்லட்டும் என்றும், விமான டிக்கெட்டை தானே எடுத்துத் தருகிறேன் என்றும் கூறினார்.