டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்து அதரவு கோரி வரும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் அப்போது உடன் இருந்தார்.
பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அவசர சட்டம் உள்ளதாகவும், ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம் என்றும் கூறினார்.
பின்னர் பேசிய கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்களித்தால் மாநிலங்களவையில் அவசர சட்டம் தோற்கடிக்கப்படும் என்றார்.
பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் பேசிய போது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே தி.மு.க.வின் ஆதரவை நாடி வந்ததாக தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி, பஞ்சாப் முதலமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகளை, திமுக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசு வழங்கியும் வரவேற்றனர்.