நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டக் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜவீதி வழியாகச் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வெளியேறி பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள சாலையிலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
கனரக வாகன போக்குவரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அழுத்தம் ஏற்பட்டு குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.