சேலம் ஓமலூர் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த தாத்தாவும், பேரனும் படுகாயமடைந்தனர்.
தொளசம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் முருகன், தனது 60ஆம் கல்யாணத்திற்காக, அங்குள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்க பேரனுடன் வந்துள்ளார்.
பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறிய போது, எதிரே அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.