9 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் அவர் இப்பயணத்தை மேற்கொள்வதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட முதலமைச்சரை அமைச்சர்கள், திமுகவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.
விமானம் ஏறும் முன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை இரு நாடுகளிலும் சந்திக்க உள்ளதாக கூறினார். புதிய தொழில் ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையெழுத்தாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.