கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பு உற்பத்திக்கு தேவையான வெயில் கடந்த ஒரு வாரமாக அதிகமாக உள்ளதால் உப்பளங்களில் உப்பு அதிக அளவில் உற்பத்தியாகி வாரப்பட்டு வருகிறது.
கோடை மழைக்குப் பின்பு வாரப்படும் புதிய உப்பு டன் ஒன்று ஆயிரத்து 500 ரூபாயாகவும் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள பழைய உப்பு டன் ஒன்று 3ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.